பஹ்ரைனின் சித்ரா பகுதியில் ஈரான் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதோடு அதில் அறுவை சிகிச்சை தேவைப்படும் சிறுவர்களும் அடங்குவர் என பஹ்ரைன் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் நிலவி வரும் இராணுவ மோதல்களுக்கு மத்தியில், பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


