Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பிரீடோ நிறுவனத்தினால் மக்களுக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சி!

பிரீடோ நிறுவனத்தினால் மக்களுக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சி!

பிரீடோ நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட பிரதேச சபை செயற்பாடுகள் தொடர்பான மக்களுக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சி கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களின் தலைமையில் கொட்டகலை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது பிரிடோ நிறுவனத்தினரால் மலையகப் பெண்கள் செயற்பாட்டு பணிக்குழுவிற்கான சட்டமூலம் பிரீடோ நிறுவனத்தாரால் கௌரவ தலைவர் அவர்களிடத்தில் கையளிக்கப்பட்டது.

மேலும் பிரதேச சபையின் செயற்பாடுகள், வழங்கப்படும் சேவைகள் என்பன தொடர்பில் தெளிவூட்டப்பட்டது.

இதன்போது பிரீடோ நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள், பிரீடோ மக்கள் உறுப்பினர்கள், கொட்டகலை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என்போர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments