Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை!

அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை!

சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சின் செயலாளரும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்டவுக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணி ஆகியோரின் சமர்ப்பிப்புகளை நீதிமன்றம் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சமர்ப்பிப்புகளைக் கேட்ட கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம, அனுஷ பெல்பிட்டவை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

46 மில்லியன் ரூபாய் நிதியை எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளியிடத் தவறியதை அடுத்து, ஜனவரி மாதம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் அனுஷ பெல்பிட்ட கைது செய்யப்பட்டமையும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments