Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இந்தியப் பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அனுரகுமார சந்தப்பு!

இந்தியப் பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அனுரகுமார சந்தப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் புது டெல்லியில் வைத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடியுள்ளார்.

தேசிய தலைநகரில் நடைபெற்று வரும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெறுள்ளது.

இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார, இந்த சந்திப்பின் போது 2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக இந்தியப் பிரதமருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதாக பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்திய – இலங்கை இடையிலான வரலாற்று ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் கலாசார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறினார்.

அத்தோடு, ‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது இலங்கைக்கு வழங்கிய விசேடமான ஒத்துழைப்பைப் பாராட்டியதுடன், அதற்காக இந்தியப் பிரதமருக்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments