நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் வேண்டிகோனர் சந்தியில் இன்று (11) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்விபத்து தொடர்பான விசாரணையை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


