Monday, November 16, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்திடீரென தீப்பற்றிய முச்சக்கர வண்டி

திடீரென தீப்பற்றிய முச்சக்கர வண்டி

கொழும்பு கிரீன் பாத் (ஆனந்த குமாரசுவாமி மாவத்தை) பகுதியில் இன்று (15) நண்பகல் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

எனினும், தீயணைப்புப் படையினர் தீயை அணைப்பதற்கு முன்னரே முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் உயிர்ச் சேதமோ காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மின் ஒழுக்கு அல்லது எரிபொருள் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments