Saturday, November 14, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சிறுவர்கள்

கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சிறுவர்கள்

கனடாவின் மொன்றியல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் நகைக்கடைக் கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மொன்றியல் பொலிஸார் சுமார் 15 பதின்ம வயதுச் சிறுவர்களைக் கைது செய்துள்ளனர்.

இதன் மூலம், இக்கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், இவர்களுக்குத் தங்கத்தை மீள்விற்பனை செய்யும் சந்தையுடன் தொடர்புகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் மொன்றியல் பகுதியிலுள்ள நகைக்கடைகளில் பல கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக, ஜனவரி 1ம் திகதி முதல் ஒக்டோபர் 31ம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொன்றியல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 55 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

தங்கத்தின் விலை அதிகரிப்பு மற்றும் குற்றவியல் கும்பல்கள் சிறுவர்களைத் தமது தேவைகளுக்காகப் பயன்படுத்துவதுமே இத்தகைய கொள்ளைகள் அதிகரிக்கக் காரணம் எனப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments