Tuesday, November 10, 2026
spot_img
Homeகனடா செய்திகள்சீன உளவாளியுடன் தொடர்பு: என்விடியா தலைவர் ஒப்புதல்

சீன உளவாளியுடன் தொடர்பு: என்விடியா தலைவர் ஒப்புதல்

அமெரிக்க புலனாய்வு அமைப்பால் சீனாவுக்கான உளவாளி என சந்தேகிக்கப்படும் ஒரு நிறுவன பெண் நிர்வாகியுடன் தமக்கு திருமணத்தை மீறிய அந்தரங்கத் தொடர்பு இருந்ததை என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் தனது நிர்வாகக் குழுவிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான தகவலின்படி, ஆலிஸ் ஹுவாங் என்ற அந்தப் பெண் சீனாவுக்கு அதிநவீன கணினி சில்லுகளை கடத்திய புகாருக்கு உள்ளான நிறுவனத்தை நடத்தி வந்தவர் என்றும், அவர் பெய்ஜிங்கிற்காக ரகசியத் தகவல்களைச் சேகரித்து வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் யாவும் ஆதாரமற்றவை என்றும், பெய்ஜிங்கிற்கு எதிரான திட்டமிட்ட அவதூறு பரப்புரை என்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை அடுத்து, என்விடியா நிறுவனப் பங்குகள் சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் சுமார் ஐந்து சதவீதம் சரிவைக் கண்டன. மேலும், இந்தச் சம்பவம் குறித்து விரிவான உள்விசாரணை நடத்தப்படும் என என்விடியா நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கடுமையான தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, எச்200 மற்றும் எச்20 ரக அதிநவீன சில்லுகளை சீனாவுக்கு விற்பனை செய்ய ஜென்சன் ஹுவாங் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் தீவிர அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், இந்த உளவு விவகாரம் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments