Saturday, November 7, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் மொகமட் ஷமி

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் மொகமட் ஷமி

இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமட் ஷமி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நேற்று இரவு தனது சமூக வலைதளத்தில் காணொளி மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

36 வயது வேகப்பந்து வீச்சாளரான ஷமி, 64 போட்டிகளில் 229 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2025 சாம்பியன்ஸ் கிண்ணம் இறுதி போட்டிக்கு பிறகு ஷமி இந்திய அணியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக அவர் பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்கவில்லை.

பங்களாதேஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டி கிரிக்கெட்டிற்கு திரும்பிய போதிலும், மொகமட்  ஷமிக்கு இந்திய அணியில் தொடர்ந்து இடம் கிடைக்கவில்லை. வீடியோ மூலம் தனது டெஸ்ட் ஓய்வை அறிவித்த ஷமி, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடப் போவதாகத் தெரிவித்தார்.

“நான் வெள்ளை ஜெர்சிக்கு விடை கொடுக்கிறேன், ஆனால் அதனுடன் தொடர்புடைய நினைவுகளுக்கு ஒருபோதும் விடை கொடுக்க மாட்டேன். நான் முதன்முறையாக இந்தியாவின் டெஸ்ட் ஜெர்சியை அணிந்தபோது, ​​என் நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரே ஒரு கனவு மட்டுமே எனக்கு இருந்தது.

அன்று முதல், ஒவ்வொரு விக்கெட்டும், ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு காயமும், ஒவ்வொரு மீள்வருகையும் எனக்கு ஏதோ ஒன்றைக் கற்று கொடுத்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு வெறும் ஒரு வடிவம் மட்டுமல்ல, அது என் வாழ்வில் மிகவும் சிறப்பான ஓர் அங்கமாகவே இருந்துள்ளது.

இன்று, எண்ணற்ற அழகான நினைவுகளுடனும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து எனது ஓய்வை அறிவிக்கிறேன். இந்தப் பயணத்தில் எனக்கு ஆதரவளித்து, இன்பத்திலும் துன்பத்திலும் என் மீது நம்பிக்கை வைத்திருந்த ஒவ்வொரு சக வீரருக்கும், பயிற்சியாளருக்கும், குடும்ப உறுப்பினருக்கும், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,” என்று ஷமி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments