Sunday, October 25, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இந்திய இளையோர் கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்

இந்திய இளையோர் கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்

இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பர்விந்தர் அவானா, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (பி.சி.சி.ஐ) இளையோர் தேர்வுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்காக இரண்டு சர்வதேச ரி20 போட்டிகளிலும், 62 முதல் தரப் போட்டிகளிலும் விளையாடியுள்ள பர்விந்தர் அவானா, முதல் தரக் கிரிக்கெட்டில் 191 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர், டில்லி, இந்தியா ஏ மற்றும் இந்திய அணிகளுக்காகவும் களமிறங்கியுள்ளார்.

ஓய்வுக்குப் பின்னர் பயிற்சியாளராகப் பணியாற்றிய அவர், டில்லியின் 16, 19 மற்றும் 23 வயதுக்குட்பட்ட அணிகளுடனும், இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியுடனும் பணியாற்றியுள்ளார்.

இதேவேளை, இளையோர் தேர்வுக்குழு உறுப்பினர்களாக கிருஷ்ண தாஸ், ராகேஷ் படேல் மற்றும் அர்ஜுன் யாதவ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களும் உள்ளூர் மற்றும் இந்திய அணிகளின் பல்வேறு நிலைகளில் விளையாடிய அனுபவம் கொண்ட முன்னாள் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments