Saturday, October 24, 2026
spot_img
Homeகனடா செய்திகள்Canada Post வார இறுதி விநியோகம் ஆரம்பம்!

Canada Post வார இறுதி விநியோகம் ஆரம்பம்!

கனடாவில் அஞ்சல் மற்றும் பார்சல் விநியோகச் சேவையில் முக்கியமான மாற்றம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. இதுவரை பெரும்பாலும் வார நாட்களில் நடைபெற்று வந்த பார்சல் விநியோகத்தை, வார இறுதிகளிலும் விரிவுபடுத்துவதற்கு கனடாவின் தேசிய அஞ்சல் நிறுவனமான Canada Post நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ரொறன்ரோவில் இந்தச் சேவை நவம்பர் மாத இறுதியில் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம், இணையவழிக் கொள்வனவுகளைச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விரைவான விநியோகத்தை வழங்குவதும், தனியார் பார்சல் விநியோக நிறுவனங்களுடன் போட்டியிடும் திறனை அதிகரிப்பதுமாகும்.

தற்போது பல தனியார் விநியோக நிறுவனங்கள் வார இறுதி நாட்களிலும் பார்சல்களை வீடுகளுக்குக் கொண்டு சேர்த்து வருகின்றன. இந்த நிலையில், Canada Post நிறுவனமும் ஏழு நாட்களும் விநியோகச் சேவையை வழங்கும் சந்தை நடைமுறைக்கு ஏற்ப தனது சேவையை விரிவுபடுத்துகிறது.

மொன்றியலில் வசிப்பவர்களுக்கு இந்த மாற்றம் குறிப்பாக இணையவழிக் கொள்வனவுகளில் பயனளிக்கக்கூடும்.என எதிர்பாக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments