அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கான நான்கு விமானச் சேவை வழித்தடங்களை இரத்துச் செய்யவதற்கு திட்டமிட்டுள்ளதாக Air Canada நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அடுத்த கோடைகாலம் முதல் பின்வரும் வழித்தடங்களில் விமானச் சேவைகளை நிறுத்தவுள்ளதாக Air Canada தெரிவித்துள்ளது.
- Vancouver-Nashville, Tenn.
- Vancouver-Raleigh-Durham, N.C.
- Toronto-Charleston, S.C.
- Montreal-Seattle, Wash.
“வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் பயணத் தேவைகளுக்கேற்ப விமானச் சேவைகளின் திறனைச் சீரமைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், Air Canada நிறுவனம் தனது விமான அட்டவணையைத் தொடர்ந்து மறுபரிசீலனை செய்து வருகிறது” என அந்நிறுவனத்தின் பேச்சாளர் Sean Davidson தெரிவித்துள்ளார்.
அண்மைய ஆண்டுகளில் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பயணங்கள் கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
கோடைகாலத்தில் எல்லை தாண்டிய பயணங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தபோதிலும், July மாதத்தில் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குத் திரும்பிய கனடா குடியிருப்பாளர்களின் பயண எண்ணிக்கை, 2024 July மாதத்துடன் ஒப்பிடுகையில் 25.6 சதவீதம் குறைவாக இருந்தது.
Statistics Canada வின் தரவுகளின்படி, August மாதத்தில் அமெரிக்கக் குடியிருப்பாளர்கள் விமானம் மூலம் 701,800 தடவைகள் கனடாவுக்குப் பயணம் செய்துள்ளனர்.
Air Canada நிறுவனத்தின் பேச்சாளர் Sean Davidson மேலும் தெரிவிக்கையில், Nashville, Raleigh-Durham மற்றும் Seattle ஆகிய நகரங்களுக்கான விமானச் சேவைகள், கனடாவின் ஏனைய விமான நிலையங்களிலிருந்து தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
எனினும், அமெரிக்காவின் Charleston நகருக்கான விமானச் சேவை தொடர்ந்து இடம்பெறுமா என்பது குறித்து அவர் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.


