Sunday, October 25, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடா இராணுவ வீரரின் பெயரில் போலி நிதி சேகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கனடா இராணுவ வீரரின் பெயரில் போலி நிதி சேகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கனடாவின் வெய்ன்ரைட் இராணுவத் தளத்தில் (Canadian Forces Base Wainwright) ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் ஆதரவுகள் குவிந்து வரும் நிலையில், இந்தத் துயரச் சம்பவத்தைப் பயன்படுத்தி போலியான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இராணுவ வீரரான பிரைவேட் ஷான் ஃபாரலின் (Pte. Shaun Farrell) பெயர் மற்றும் புகைப்படம், Spotfund.com இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள போலியான நன்கொடைப் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவரது தாயார் பெட்ரிசியா ஃபாரல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அவர், குடும்பத்தினரால் உறுதிப்படுத்தப்படாத எந்தவொரு நிதி சேகரிப்பு நடவடிக்கைக்கும் நன்கொடை வழங்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

“ஒரு துயரச் சம்பவத்தையும், உதவ விரும்பும் மக்களின் தாராள மனப்பான்மையையும் யாராவது தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது மனதை உடைக்கிறது” என அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்தக் கடினமான நேரத்தில் உங்களது அன்பையும் இரக்கத்தையும் யாரும் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்” என்றும் அவர் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

இராணுவத் தளத்தில் இடம்பெற்ற தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ விரும்புவோர், நன்கொடை வழங்குவதற்கு முன்னர் குறித்த நிதி சேகரிப்பு நடவடிக்கை உண்மையானதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments