இங்கிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி, 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 (T20I) மற்றும் ஒருநாள் (ODI) சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது.
பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி, ‘ஐசிசி மகளிர் செம்பியன்ஸ் கிண்ணம் 2027’ தொடரைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் மீண்டும் வருகை தந்து ஒருநாள் தொடரில் பங்கேற்கும்.
கண்டி பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்து டி20 போட்டிகளும் நடைபெறும்.
முதலாவது போட்டி பெப்ரவரி 1 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி பெப்ரவரி 3 ஆம் திகதியும், மூன்றாவது போட்டி பெப்ரவரி 5 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (RDICS) நடைபெறும்.
முதல் போட்டி மார்ச் 4, இரண்டாவது போட்டி மார்ச் 6 மற்றும் இறுதிப் போட்டி மார்ச் 8 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.
இலங்கை மகளிர் அணிக்கு இந்தச் சர்வதேசத் தொடர் மிக முக்கிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


