Tuesday, October 20, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: இருவர் மீது வழக்குப் பதிவு

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: இருவர் மீது வழக்குப் பதிவு

தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், திமுக பெண் கவுன்சிலர் உள்ளிட்ட இருவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

சென்னையில் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி நடைபெற்ற திமுக கூட்டத்தில், முதல்வர் விஜய் குறித்து திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி உதயகுமார், சுதா தீனதயாளன் மற்றும் கூட்டத்தை ஏற்பாடு செய்த முரளிதரன் ஆகியோருக்கு எதிராக சென்னை பி-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இருவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments