Tuesday, October 20, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்தனுஷின் ‘ஓம்’ படத்தின் இரண்டாவது பாடல் ‘வீழா வீரா’ வெளியீடு!

தனுஷின் ‘ஓம்’ படத்தின் இரண்டாவது பாடல் ‘வீழா வீரா’ வெளியீடு!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘வீழா வீரா’ இன்று வெளியாகியுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் மற்றும் நசீருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாய் அபியங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இவரது இசையில் வெளியான ‘அலாக்கா லோவா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக, இப்படம் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்துடனான வெளியீட்டு மோதலைத் தவிர்க்கவும், தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’ படத்துக்கு வழிவிடவும், ‘ஓம்’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, இப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments