Monday, October 19, 2026
spot_img
Homeகனடா செய்திகள்ஆல்பர்ட்டா மாகாணம் பிரியும் விவகாரம்: இன்று வாக்கெடுப்பு

ஆல்பர்ட்டா மாகாணம் பிரியும் விவகாரம்: இன்று வாக்கெடுப்பு

ஆல்பர்ட்டா மாகாணம் பிரியும் விவகாரம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது.

கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா பிரியும் விவகாரம் தொடர்பில், இன்று, அதாவது, அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

கனேடிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா மாகாணம், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு மாகாணமாகும்.

ஆனால், கனடாவுக்கு தாங்கள் தங்கள் வளம் மூலம் பெரிய அளவில் பங்களிப்பைச் செய்தும், பதிலுக்கு ஃபெடரல் அரசு தங்களை சரியாக கவனிப்பதில்லை, தங்கள் கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் எடுபடவில்லை என்னும் கருத்து ஆல்பர்ட்டா மக்களிடையே நிலவிவருகிறது.

ஆகவே, வளம் நிறைந்த ஆல்பர்ட்டா மாகாணம், கனடாவிலிருந்து பிரிந்து தன்னைத்தான் நிர்வகிக்கவேண்டும் என ஆல்பர்ட்டா மக்களில் ஒரு பிரிவினர் கருதுகிறார்கள்.

ஆகவே, ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் இணைந்திருப்பதா அல்லது கனடாவிலிருந்து பிரிவது தொடர்பில் இன்னொரு வாக்கெடுப்பு நடத்தவேண்டுமா என்பதை அறிபதற்காக இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இந்நிலையில், அந்த வாக்கெடுப்பில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை ஏற்கனவே முடிவடைந்துவிட்டது.

இந்த முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை, 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெற்ற நிலையில், இதுவரை 1,356,873 பேர் வாக்களித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments