கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள பென்டிக்டன் நகரின் புதிய மேயராக டான் ஆஷ்டன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய மேயர் ஜூலியஸ் ப்ளூம்ஃபீல்ட் உள்ளிட்ட ஐந்து வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி அவர் வெற்றிபெற்றுள்ளார்.
டான் ஆஷ்டன் ஏற்கனவே 2008 முதல் 2013 வரை பென்டிக்டன் நகர மேயராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அத்துடன், 2024ஆம் ஆண்டு வரை பென்டிக்டன்–சமர்லேண்ட் தொகுதியின் மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
“மீண்டும் எனது சொந்த ஊருக்குத் திரும்புவது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். சுமார் 12 ஆண்டுகள் விக்டோரியாவில் இருந்தேன். பென்டிக்டன் எனது சொந்த ஊர்; எப்போதும் அப்படித்தான் இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
நகரின் பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துதல், மிதிவண்டிப் பாதைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல் மற்றும் நகரசபைச் செலவினங்களை நிர்வகித்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பென்டிக்டன் வர்த்தக மற்றும் மாநாட்டு மையத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி, கண்ணீர் மற்றும் ஏமாற்றம் கலந்த உணர்வுகள் காணப்பட்டன.


