Saturday, October 17, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கியூபெக்கிலும் குடியேற்றக் கட்டுப்பாடுகள்

கியூபெக்கிலும் குடியேற்றக் கட்டுப்பாடுகள்

கியூபெக்கில் ஆட்சியமைக்கவுள்ள பார்ட்டி கியூபெக்குவா கட்சி, ஆண்டுதோறும் வழங்கப்படும் நிரந்தர வதிவிட அனுமதிகளின் எண்ணிக்கையை 45,000 இலிருந்து 35,000 ஆகக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை முன்மொழிந்துள்ளது.

மேலும், கியூபெக்குக்கு வெளியிலிருந்து நிரந்தரக் குடியேற்றத்தைத் தற்காலிகமாக நிறுத்துதல், ஏற்கனவே மாகாணத்தில் வசிக்கும் தற்காலிகக் குடியிருப்பாளர்களுக்கு நிரந்தர வதிவிட அனுமதி வழங்குவதில் முன்னுரிமை அளித்தல் மற்றும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கான தெரிவு விதிகளை இறுக்குதல் போன்ற யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

மொன்றியல் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் கத்தரின் எக்ஸார்டெஸ் கருத்துப்படி, கியூபெக்கில் குடியேற்றம் தொடர்பான விவாதம் பிரெஞ்சு மொழி மற்றும் கலாசார அடையாளத்தை மையமாகக் கொண்டுள்ள நிலையில், ஆல்பர்ட்டாவில் சமூகச் சேவைகள் மீதான அழுத்தங்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments