Thursday, October 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பலத்த மின்னல் தாக்கம் - பல மாகாணங்கள், மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கம் – பல மாகாணங்கள், மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (15) முற்பகல் 11.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (16) அதிகாலை 1.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வடமத்திய, கிழக்கு, மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, கம்பஹா, கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments