அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள தென்னாப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியின் தலைவராக டெம்பா பவுமா நியமிக்கப்பட்டுள்ளார்.
அணியில் அய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், டேவிட் பெடிங்ஹம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர், கைல் வெரைன், மார்கோ யான்சென், சிமோன் ஹார்மர், கேசவ் மகாராஜ் மற்றும் ஆன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


