Friday, October 9, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வெளிநாட்டுப் பல்கலைக்கழக அனுமதி வழங்குவதாகக் கூறி மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வெளிநாட்டுப் பல்கலைக்கழக அனுமதி வழங்குவதாகக் கூறி மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் போலியான விளம்பரங்கள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவான (Sri Lanka CERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான மோசடிகளில் சிக்கி பெற்றோர்களும் மாணவர்களும் பல இலட்சம் ரூபாய்களை இழந்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

முன்னணி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் எனத் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும் மோசடிக்காரர்கள், பதிவு கட்டணம் மற்றும் ஆரம்பக் கல்விக் கட்டணங்களைச் செலுத்தினால் பல்கலைக்கழக அனுமதி, மாணவர் விசா, வேலை அனுமதி உள்ளிட்டவற்றைப் பெற்றுத் தருவதாகவும், பின்னர் குடியுரிமையைக்கூட பெற்றுக்கொள்ள முடியும் என்றும் உறுதியளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் மற்றும் வட்ஸ்அப் ஊடாக நம்பகத்தன்மை மிக்க காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து மாணவர்களையும் பெற்றோர்களையும் நம்பவைக்கும் இவர்கள், பின்னர் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்புமாறு கோருகின்றனர்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் தொடர்புகளைத் துண்டித்துவிட்டு மோசடிக்காரர்கள் தலைமறைவாகிவிடுவதாக, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

எனவே, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளைத் தேடும்போது, பல்கலைக்கழகப் பிரதிநிதிகளின் நம்பகத்தன்மை, ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களை உறுதிப்படுத்திய பின்னரே பணம் செலுத்துமாறு, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்கு சட்டபூர்வமானதும் அங்கீகரிக்கப்பட்டதுமான வழிமுறைகளை மாத்திரம் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ள

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments