Friday, September 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்குளவி கொட்டுக்கு இலக்காகிய 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டுக்கு இலக்காகிய 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி

தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (18) பிற்பகல் வட்டவளை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பின் ஓயா தோட்டத்தில் தேயிலை பறிக்கும் போது, தேயிலைச் செடிகளுக்குள் இருந்த குளவி கூடு கலைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் இந்த அனர்த்தத்துக்கு முகம் கொடுத்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையில் உள்ள மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments