மாத்தறை முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை காரணமாக, வானிலை ஆய்வு மையம் ‘அம்பர்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாகப் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
மேலும், மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


