Friday, September 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அனுராதபுரத்தில் புதிய சக்தி சேமிப்பு புரட்சி - ஜனாதிபதி தலைமையில் திறந்து வைப்பு

அனுராதபுரத்தில் புதிய சக்தி சேமிப்பு புரட்சி – ஜனாதிபதி தலைமையில் திறந்து வைப்பு

அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 10 மெகாவொட் / 40 மெகாவொட் மணிநேர மின்கல வலுசக்தி சேமிப்பு கட்டமைப்பு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (18) முற்பகல் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திறனையும் மின் வலையமைப்பின் ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்தும் நோக்கத்துடன், ஸ்டோர்எக்ஸ்(Storex) தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இந்த வலுசக்தி சேமிப்பு கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

வலு சக்தியை சேமிக்கும் மின்கல கட்டமைப்புத் தொழில்நுட்பமானது, தற்போதைய வலுசக்தித்துறையில் உள்ள மிக முக்கிய மற்றும் மிகவும் வினைத்திறனான தொழில்நுட்பமாகும். பகல் வேளையில் உற்பத்தி செய்யப்படும் மேலதிக சூரிய சக்தியைச் சேமித்து, இரவு வேளையில் மின்சாரதிற்கான கேள்வி அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் தேசிய கட்டமைப்புடன் இணைப்பதே இத்தொழில்நுட்பத்தின் வீசேட அம்சமாகும்.

தேசிய மின் வலையமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் வகையில், 13 வலுசக்தி சேமிப்பு கட்டமைப்புகளை 130 மெகாவோட் மற்றும் 520 மெகாவோர்ட் மணித்தியால கொள்ளளவுடன் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் பணிகள் Storex தனியார் நிறுவனத்தின் முழுமையான திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி, முதலாவது வலுசக்தி சேமிப்பு கட்டமைப்பு அநுராதபுரத்தில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது. எஞ்சிய திட்டங்களும் எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட்டு தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments