எர்லிங் ஹாலண்ட் தனது கால்பந்து வாழ்க்கையில் கிளப் மற்றும் தேசிய அணிக்காக இணைந்து 300 கோல்களை பதிவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
கோவென்ட்ரி அணிக்கு எதிரான போட்டியில் 26ஆவது நிமிடத்தில் கோல் அடித்ததன் மூலம் ஹாலண்ட் இந்த சாதனையைப் படைத்தார். இப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
384 போட்டிகளில் 300 கோல்களை அடித்துள்ள ஹாலண்ட், கிளியன் எம்பாபே மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட குறைவான போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
அதிவேகமாக 300 கோல்களை எட்டியவர்களில் லியோனல் மெஸ்ஸி 365 போட்டிகளுடன் முதலிடத்திலும், ஹாலண்ட் 384 போட்டிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.


