Sunday, September 6, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்டைமண்ட் லீக்கில் தங்கம் வென்று அசத்திய ரமேஷ் தரங்க!

டைமண்ட் லீக்கில் தங்கம் வென்று அசத்திய ரமேஷ் தரங்க!

ஈட்டி எறிதலில் உலகளவில் தொடர்ந்து புதிய சரித்திரம் படைத்து வருகிறார் இலங்கையின் ரமேஷ் தரங்க.

சனிக்கிழமை இரவு நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் (Diamond League Final), 89.04 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

இந்தப் போட்டியில் போலந்தின் டேவிட் வெக்னர் 87.47 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தையும், டிரினிடாட் மற்றும் டொபாகோவின் கெஷோர்ன் வால்காட் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் உலகின் நம்பர் 1 வீரராகக் களம் இறங்கிய ரமேஷ், ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் ரோமில் நடைபெற்ற போட்டியில் 92.62 மீட்டர் எறிந்து இந்த ஆண்டின் உலக சாதனையை தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments