Tuesday, September 1, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வைத்தியசாலையில் இருந்து தப்பிய கைதி மீண்டும் கைது!

வைத்தியசாலையில் இருந்து தப்பிய கைதி மீண்டும் கைது!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய நிலையில், இளவாலை பகுதியில் வைத்து இன்று (31) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்திற்காக குறித்த நபருக்கு 24 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில், மறுநாள் திடீர் சுகவீனம் ஏற்பட்டதாகக் கூறி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட கைதி, ஞாயிற்றுக்கிழமை மதியம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து சிறைக்காவலர்கள் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் விசேட குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், இளவாலை பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்த நிலையில் கைதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைக்காவலர்களின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக மேலதிக வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments