Thursday, August 20, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இலங்கையுடனான முத்தரப்பு தொடருக்கான போட்டி அட்டவணை வௌியீடு!

இலங்கையுடனான முத்தரப்பு தொடருக்கான போட்டி அட்டவணை வௌியீடு!

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு மற்றும் முத்தரப்புத் தொடர்களை எதிர்வரும் ஒக்டோபர் 9 முதல் நவம்பர் 21 வரை நடத்தவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

இலங்கை அணி ஒக்டோபர் 4 ஆம் திகதி பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

அதற்கமைய ஒக்டோபர் 9 முதல் 13 வரை ராவல்பிண்டியில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 (T20I) தொடரில் இலங்கை பங்கேற்கும்.

டி20 தொடரைத் தொடர்ந்து, ஒக்டோபர் 18 முதல் 31 வரை ராவல்பிண்டி மற்றும் லாகூரில் நடைபெறவுள்ள ஒருநாள்​ை முத்தரப்புத் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வந்தடையும்.

முத்தரப்புத் தொடரின் முடிவில், இலங்கை அணி நவம்பர் 4 முதல் 6 வரை இஸ்லாமாபாத்தில் நடைபெறும் மூன்று நாள் பயிற்சிப் போட்டியில் விளையாடும்.

அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதும்.

முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 9 முதல் 13 வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நவம்பர் 17 முதல் 21 வரையிலும் நடைபெறும்.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் தென்னாப்பிரிக்க அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காகப் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ததை தொடர்ந்து, நடப்பு 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் பாகிஸ்தான் நடத்தும் இரண்டாவது டெஸ்ட் தொடர் இதுவாகும்.

ஒருநாள் முத்தரப்புத் தொடரானது, பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் நடத்தும் இரண்டாவது ஒருநாள் முத்தரப்புத் தொடராகவும் அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு, ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணம் 2025 தொடருக்கு முன்னதாக, பெப்ரவரி மாதத்தில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பங்கேற்ற ஒருநாள் முத்தரப்புத் தொடரை பாகிஸ்தான் நடத்தியிருந்தது.

போட்டிகளின் முழுமையான அட்டவணை கீழே.

இலங்கையின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் (T20I தொடர்) 

ஒக்டோபர் 9 – முதலாவது T20I, ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி

ஒக்டோபர் 11 – இரண்டாவது T20I, ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி

ஒக்டோபர் 13 – மூன்றாவது T20I, ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி

இலங்கையின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் டெஸ்ட் தொடர் 

நவம்பர் 4-6 – மூன்று நாள் பயிற்சிப் போட்டி, இஸ்லாமாபாத்

நவம்பர் 9-13 – முதலாவது டெஸ்ட் போட்டி, ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி

நவம்பர் 17-21 – இரண்டாவது டெஸ்ட் போட்டி, கடாபி மைதானம், லாகூர்

ஒருநாள் முத்தரப்புத் தொடர் (இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை) 

ஒக்டோபர் 18 – பாகிஸ்தான் எதிர் இலங்கை, ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி

ஒக்டோபர் 20 – பாகிஸ்தான் எதிர் இங்கிலாந்து, ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி

ஒக்டோபர் 22 – இலங்கை எதிர் இங்கிலாந்து, ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி

ஒக்டோபர் 25 – பாகிஸ்தான் எதிர் இங்கிலாந்து, கடாபி மைதானம், லாகூர்

ஒக்டோபர் 27 – பாகிஸ்தான் எதிர் இலங்கை, கடாபி மைதானம், லாகூர்

ஒக்டோபர் 29 – இலங்கை எதிர் இங்கிலாந்து, கடாபி மைதானம், லாகூர்

ஒக்டோபர் 31 – முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டி, கடாபி மைதானம், லாகூர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments