தேனிலவு சென்றபோது மாதவிடாய் மணமகன் செயலால் அதிர்ந்த மணமகள்; காப்பாற்றிய ஹோட்டல் ஊழியர்கள்
இந்தியா உத்திர பிரதேசத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள் தேனிலவின்போது மாதவிடாய் ஏற்பட்டதால் தனது கணவர் தன்னைத் தாக்கியதாகப், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த பெண் ஒருவர், பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, அவரது கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,
கணவர் மற்றும் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக பெண் முறைப்பாடு
கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் நிகில் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது வரதட்சணையாக லட்சக்கணக்கில் பணமும், காரும் கொடுக்கப்பட்ட போதிலும், கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை துன்புறுத்தியதாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த தனது கணவர் நிகில் மிஸ்ரா, தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்து தன்னை அறைந்தும், உதைத்தும், குத்தியும் தாக்கியதுடன், கழுத்தை நெரிக்கவும் முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஹோட்டல் ஊழியர்கள் தலையிட்டு தாக்குதலை நிறுத்தியதாக அவர் கூறினார். தொடர்ந்து டெல்லிக்கு திரும்பிய பின்னரும் கணவர் மற்றும் மாமியார், நாத்தனார் ஆகியோர் சேர்ந்து அவரை மனரீதியாக தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர்.
மேலும், திருமணமான 45 நாட்களுக்குள் அதாவது ஜூலை 14 அன்று அவர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க முயன்றும் பலனளிக்காத நிலையில், கோரக்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கௌஸ்துப் அவர்களின் தலையீட்டிற்கு பின் கணவர் நிகில் மிஸ்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


