Friday, August 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சலேவின் மனுவிற்கு அமைவான இடையீட்டு மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை ஒத்திவைப்பு!

சலேவின் மனுவிற்கு அமைவான இடையீட்டு மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை ஒத்திவைப்பு!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, தன்னை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமைவான இடையீட்டு மனுக்கள் இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீள பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது, இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்த கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட இடையீட்டு மனுதாரர்களின் தரப்பு சட்டத்தரணிகள் சிலர் தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

அதற்கமைய, இடையீட்டு மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனைகள் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments