Wednesday, August 5, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இன்று காலை திறக்கப்படும் கொத்மலை - அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இன்று காலை திறக்கப்படும் கொத்மலை – அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இன்று (05) காலை 7.00 மணியளவில் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, வினாடிக்கு 130 கன அடி நீர் மகாவலி கங்கையில் திறந்து விடப்படவுள்ளதாக கொத்மலை நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக உலப்பனை, கெலியோயா, கம்பளை, பேராதனை மற்றும் கட்டுகஸ்தோட்டை ஆகிய பிரதேசங்களில் மகாவலி கங்கையின் இருபுறமும் உள்ள தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments