Thursday, July 23, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்எல்லை தாண்டி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லைக்குள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை மீறிச் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றும், அதில் இருந்த 9 இந்திய மீனவர்களும் நேற்று புதன்கிழமை மாலை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின்போது இரணைதீவுக்குத் தெற்கே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 50 இற்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதைக் கடற்படையினர் அவதானித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது ஒரு இந்திய மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடிப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments