முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
அவர் தம்மைத் தாமே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.


