Wednesday, July 15, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 47.5 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றது.

அதிகபட்சமாக ஜோ ரூட் 76 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.

259 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் முறையே 11 மற்றும் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

ஆனால் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 80 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் தசைபிடிப்பு ஏற்பட பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார்.

அவர் வெளியேறிய சிறிதுநேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் (35) , கேஎல் ராகுல் (01) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி தடுமாறியது.

அப்போது கைக்கோர்த்த அக்சர் பட்டேல் (57) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (52) இருவரும் அரைசதம் விளாசியதுடன் 100 ஓட்டங்கள் இணைப்பாட்டத்துடன், 45.2 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 262 ஓட்டங்களைப் பெற்று இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.

டி20 தொடரை 4-0 என இழந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments