Wednesday, July 15, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்16 ஆண்டுகளுக்கு பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஸ்பெய்ன்

16 ஆண்டுகளுக்கு பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஸ்பெய்ன்

உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் ஸ்பெய்ன் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

உலகக் கிண்ண கால்பந்து 2026 தொடரின் பரபரப்பான முதல் அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெய்ன் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் 22-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மிக்கெல் ஓயர்சாபால் (Mikel Oyarzabal) முதல் கோல் அடித்தார்.

தொடர்ந்து, ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் பெட்ரோ போரோ (Pedro Porro)  இரண்டாவது கோலை அடித்து ஸ்பெய்ன் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

பிரான்ஸ் அணி ஆட்டத்தை தன்வசப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், ஸ்பெய்ன் அணியின் பலமான தடுப்பாட்டத்தை மீறி அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றதற்குப் பிறகு, ஸ்பெய்ன் அணி உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணியுடன் இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன் பலப்பரீட்சை நடத்தும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments