Saturday, July 11, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்மொரோக்கோவை அதிரடியாக வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த பிரான்ஸ்

மொரோக்கோவை அதிரடியாக வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த பிரான்ஸ்

உலகக் கிண்ண கால்பந்து 2026 தொடரின் காலிறுதிப் போட்டியில், மொரோக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.

போட்டியின் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

பிரான்ஸ் அணிக்கு, ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappé) முதல் கோலை அடித்து திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து 66-வது நிமிடத்தில் உஸ்மான் டெம்பேலே (Ousmane Dembélé) மற்றொரு கோலை அடிக்க, பிரான்ஸ் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

எனினும் ஆட்டநேரம் முடியும் வரை மொரோக்கோ அணி கோல் எதனையும் அடிக்கவில்லை.

ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் 2-0 என வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மொரோக்கோ அணியின் உலகக் கிண்ண கனவு இந்த காலிறுதியுடன் முடிவுக்கு வந்தது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments