Saturday, July 4, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்LPL 2026 தொடருக்கான டிக்கட் விற்பனை ஆரம்பம்

LPL 2026 தொடருக்கான டிக்கட் விற்பனை ஆரம்பம்

2026ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான டிக்கட் விற்பனை அதிகாரபூர்வமாக ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஜூலை 17 முதல் ஒகஸ்ட் 8 வரை நடைபெறும் இந்த LPL தொடரின் அதிகுறைந்த டிக்கெட் விலை 300 ரூபாவில் இருந்து ஆரம்பிப்பதோடு, டிக்கட் விலை 7500 ரூபா வரை செல்கின்றது.

தொடரின் முதல் போட்டியில் ஜப்னா மற்றும் காலி அணிகள் மோதவுள்ளன. மேலும் இந்த தொடரின் முதல் போட்டியில் இரசிகர்களைக் கவரும் வகையில் ட்ரோன் கண்காட்சி (Drone Show) ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான டிக்கட் விற்பனை, BookMyShow இணையதளத்தில் தற்போது அதிகாரபூர்வமாக ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கையின் முன்னணி நான்கு மைதானங்களில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் கட்டண விபரங்கள் கீழே அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments