Friday, July 3, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்விடைபெறுகிறாரா ரொனால்டோ? சகோதரி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

விடைபெறுகிறாரா ரொனால்டோ? சகோதரி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அவரது சகோதரி காட்டியா அவிரோ தெரிவித்துள்ளார்.

41 வயதாகும் ரொனால்டோ கால்பந்து உலகில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

தற்போது அவர் 2026 பிபா உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு பெற உள்ளதாக அவரது சகோதரி காட்டியா அவிரோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஒரு பேட்டியில் கருத்து தெரிவித்த அவர்,

ரொனால்டோவின் சர்வதேச கால்பந்து பயணம் விரைவில் நிறைவடைய உள்ளது என்று கூறிய காட்டியா அவிரோ, ரொனால்டோ விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் ரசிகர்கள் முழுமையாக ரசித்து கொண்டாடுமாறும் கேட்டுக்கொண்டார்.

எனினும், இதுவரை கிறிஸ்டியானோ ரொனால்டோ அல்லது போர்த்துகல் கால்பந்து சம்மேளனம் சார்பில் அவரது ஓய்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

எனினும், அவரது சகோதரி வெளியிட்ட தகவல் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments