லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வீரர்கள் வரைவு கொழும்பில் நேற்று (01) நடைபெற்றது.
LPL வரைவில் ஜப்னா கிங்ஸ், கொழும்பு கேப்ஸ், கண்டி றோயல், கோல் கெலண்ட்ஸ் மற்றும் தம்புள்ள சிக்ஸர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் வீரர்கள் தங்களுடைய அணிகளில் ஒப்பந்தம் செய்திருந்தன.
வீரர்கள் வரைவுக்கு முன்னர் ஒவ்வொரு அணிகளும் தலா 4 வீரர்களை தங்களுடைய அணிக்காக நேரடியாக ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், மேலும் 16 வீரர்களை இணைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
பல முன்னணி உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் இளம் வீரர்கள் இம்முறை LPL தொடரில் விளையாடும் வாய்ப்பினை பெற்றிருந்த போதும், ஒருசில முக்கிய வீரர்களுக்கு அணிகளில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தமிழ்பேசும் வீரர்களான விஜயகாந்த் வியாஸ்காந்த் (கோல் கெலண்ட்ஸ்), மொஹமட் சிராஸ் (ஜப்னா கிங்ஸ்), குகதாஸ் மாதுளன் (ஜப்னா கிங்ஸ்), சாருஜன் சண்முகநாதன் (கொழும்பு கேப்ஸ்) மற்றும் அருள் பிரகாசம் (கொழும்பு கேப்ஸ்) ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
பெதும் நிஸ்ஸங்க மற்றும் மதீஷ பத்திரண ஆகியோர் உபாதை காரணமாக இம்முறை விளையாடவில்லை என்பதுடன், தனன்ஜய டி சில்வா, லஹிரு குமார போன்ற முன்னணி வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
LPL தொடருக்கான அணிக்குழாம்களின் முழு விபரம்



