Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்மசகு எண்ணெய் விலையில் பாரிய மாற்றம்!

மசகு எண்ணெய் விலையில் பாரிய மாற்றம்!

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

அதே நேரத்தில் ஆசிய பங்குச் சந்தைகள் உயர்வைக் கண்டுள்ளன.

ஈரான் அரசுடன் ஒரு ஒப்பந்தம் பெருமளவில் பேசி முடிக்கப்பட்டுவிட்டது என்றும் அதன் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றுமுன்தினம் கூறியிருந்தார்.

ஆனால், அதற்கு அடுத்த நாளே, ஒப்பந்தத்தை அவசரப்பட்டு முடிக்க வேண்டாம் என்று தனது பேச்சுவார்த்தைக் குழுவை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இன்று (24) காலையில் ஆசிய சந்தை நிலவரப்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 5% சரிந்து 98.36 டொலராகவும், அமெரிக்க சந்தையில் வர்த்தகமாகும் மசகு எண்ணெய் விலை 5.3% சரிந்து 91.50 டொலராகவும் காணப்பட்டது.

முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் என்று ட்ரம்ப் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

ஆனால் அதுகுறித்த கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

உலகின் மசகு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் ஐந்தில் ஒரு பகுதி பொதுவாகக் கடந்து செல்லும் இந்த குறுகிய நீர்வழிப்பாதை, கடந்த பெப்ரவரி 28 அன்று மோதல் தொடங்கியதில் இருந்து மூடப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் பல நாடுகளின் பங்குச் சந்தை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments