Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பெல்ஃபாஸ்டின் அடையாளமான ஹோட்டல்கள் இடிப்பு: 500 அறைகளைக் கொண்ட மாணவர் குடியிருப்பு உருவாகிறது!

பெல்ஃபாஸ்டின் அடையாளமான ஹோட்டல்கள் இடிப்பு: 500 அறைகளைக் கொண்ட மாணவர் குடியிருப்பு உருவாகிறது!

பெல்ஃபாஸ்டின் (Belfast ) அடையாளங்களாகத் திகழும் பழமையான ஹோட்டல் மற்றும் மதுவகப்பகம் (Pub) இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் 500-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட மாணவர் குடியிருப்பு வளாகம் அமைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலத்தின் உரிமையாளரான மூனி ஹோட்டல் குழுமம் (Mooney Hotel Group), ஹில்ஸ்பரோவைச் சேர்ந்த புகழ்பெற்ற கட்டுமான நிறுவனமான கிரஹாம் (Graham) உடன் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்காக 500-க்கும் மேற்பட்ட அறைகள் கட்டப்படவுள்ளன.

பெல்ஃபாஸ்டில் தற்போது தங்கும் விடுதித் தொழிலின் போக்கு மாறியுள்ளதாக மூனி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் மூனி தெரிவித்துள்ளார்.

மாணவர் குடியிருப்புச் சந்தையில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சில ஆய்வுகள் கூறினாலும், இந்தத் தளம் குயின்ஸ் பல்கலைக்கழகத்திற்கு (Queen’s University) மிக அருகில் இருப்பதால், இது மாணவர்களுக்குச் சிறந்த இடமாக அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் மிகப்பெரிய மாணவர் தங்குமிடச் சேவை நிறுவனமான ‘ஹோம்ஸ் ஃபார் ஸ்டூடண்ட்ஸ்’ (Homes for Students) முதன்முறையாக வட அயர்லாந்து சந்தையில் நுழைவதற்கு இத்திட்டம் வழிவகுத்துள்ளது.

இது தங்களது திட்டத்தின் தரத்திற்குச் சான்றாக அமைவதாகக் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது இதற்கான முதற்கட்டத் திட்டமிடல் அறிவிப்பு (Pre-application) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பெல்ஃபாஸ்டின் நீண்டகால வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ஒரு கட்டிடம் மாணவர் குடியிருப்பிற்காக மாற்றப்படுவது அந்தப் பகுதி மக்களிடையே கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments