Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மூடப்பட்டிருந்த தெனியாய பாடசாலைகள் நாளை மீள திறப்பு!

மூடப்பட்டிருந்த தெனியாய பாடசாலைகள் நாளை மீள திறப்பு!

காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயப் பாடசாலைகளை நாளை (13) முதல் மீண்டும் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநரின் தலைமையில் நேற்று (11) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தென் மாகாண கல்விச் செயலாளர் நிஷாந்த பத்திரண தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களிடையே காய்ச்சல் பரவியதையடுத்து, தெனியாய கல்வி வலயத்திலுள்ள 4 பாடசாலைகள் கடந்த வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டன.

குறித்த பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 56 மாணவர்கள் இந்தக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்ததாக சுகாதாரப் பிரிவினர் குறிப்பிட்டிருந்தனர்.

தற்போது சம்பந்தப்பட்ட பாடசாலைகளில் பாதுகாப்பான சுகாதாரச் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நீரைப் பயன்படுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments