Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பேருந்துக் கட்டணங்கள் 12.19% அதிகரிப்பு!

பேருந்துக் கட்டணங்கள் 12.19% அதிகரிப்பு!

நாட்டில் பேருந்துக் கட்டணங்கள் (23) நள்ளிரவு முதல் 12.19% உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜெயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.

இந்தத் திருத்தத்தின்படி, குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 27 ரூபாவிலிருந்து 30 ரூபாவாகவும், அதிகபட்சக் கட்டணம் 2,159 ரூபாவிலிருந்து 2,422 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் எரிபொருள் விலை உயர்ந்ததால், போக்குவரத்துத் துறையின் இயக்கச் செலவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இந்தக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments