Wednesday, March 11, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஸ்கேட் பூங்கா கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் அடையாளம் !

ஸ்கேட் பூங்கா கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் அடையாளம் !

ஒரு ஸ்கேட் பூங்காவில் நடந்த இரட்டை கத்திக்குத்து சம்பவத்தில் கொல்லப்பட்ட நபரின் பெயரை துப்பறியும் நிபுணர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

(Northampton) நார்தாம்ப்டனைச் சேர்ந்த 20 வயதான மேசன் மில்லர் (Mason Miller), என்பவரே கடந்த புதன்கிழமை அந்த ஊரின் பிரையர் ஹில் ஸ்கேட் பூங்காவில் (Briar Hill Skate Park) நடந்த தாக்குதலில் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதே சம்பவத்தில் கத்தியால் குத்தப்பட்ட 17 வயது இளைஞர் ஒருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விவகாரத்தில் நடந்து வரும் விரிவான பொலிஸ் விசாரணையின் ஒரு பகுதியாக, வன்முறை மற்றும் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவர்கள் இருவர் மற்றும் 14 வயது சிறுவன் ஒருவன் நேற்று முன்தினம் (Northampton) நார்தாம்ப்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களுக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டு, உள்ளூர் அதிகார சபையின் (Local Authority Care) பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக (Northamptonshire) நார்தாம்ப்டன்ஷையர் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை முன்னதாக வியாழக்கிழமை அன்றுகொலை சந்தேகத்தின் பேரில் 17, 16, 15 மற்றும் 14 வயதுடைய நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டதுடன் குற்றத்திற்கு உதவியதாகக் கூறி 35 மற்றும் 56 வயதுடைய இரண்டு ஆண்கள் மற்றும் 33 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த கொலை விசாரணை மிக வேகமாக நடைபெற்று வருகின்ற நிலையில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொலைக்கான காரணம் விரைவில் கண்டறியப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments