Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்எனக்கும் பத்மேக்கும் தொடர்பில்லை - நடிகை ஹேஷானி!

எனக்கும் பத்மேக்கும் தொடர்பில்லை – நடிகை ஹேஷானி!

மொடல் அழகியும் நடிகையுமான ஹேஷானி லியாதிப்பிட்டிய, சமூக ஊடகங்களில் தன்னையும் பாதாள உலகத்தலைவன் ‘கெஹெல்பத்தர பத்மே’ வையும் தொடர்புபடுத்தி வெளியாகியுள்ள தகவல்களை முற்றிலும் மறுத்துள்ளார்.

இது தொடர்பில் பேஸ்புக்கில் அவர் வெளியிட்ட வீடியோவில் கடந்த சில நாட்களாக சில சமூக ஊடகங்களில் சிலர் தன் பெயரைப் பயன்படுத்தி உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாக தெரிவித்தார்.

“சமூக ஊடகங்களில் சிலர் இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுகளை உருவாக்குவது மிகவும் வேதனையாகவும் விரக்தியூட்டுவதாகவும் உள்ளது. நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் செய்யாத, நினைத்துப் பார்த்ததில்லாத விஷயங்களைப் பற்றியே இது. தங்களின் சொந்த திருப்திக்காகவும், தாழ்ந்த மனப்பான்மைக்காகவும், அவர்கள் உண்மையை சரிபார்க்காமலே இத்தகைய பெரும் குற்றச்சாட்டுகளை வெளியிடுகின்றனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

தன்னைப் பற்றிய இக்குற்றச்சாட்டுகளை பரப்பியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக லியாதிப்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

பொது தளங்களில் அவமானப்படுத்தல் மற்றும் ஆதாரமற்ற ஊகங்களின் கலாசாரத்தால் ஏற்பட்ட மனஅழுத்தத்தை வெளிப்படுத்திய அவர், மக்கள் தங்களுக்கு பிடித்த விடயங்களுடன் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“மற்றவர்கள் வைத்திருப்பதைக் குறித்து பொறாமைப்படாமல், நாம் வைத்திருப்பதிலேயே மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்,” என அவர் கூறினார். “உண்மையை அறியாமல் ஒருவரை புண்படுத்தவோ, இகழவோ முன் வருவதற்கு முன் இரண்டு முறை யோசிக்க வேண்டும்,” எனவும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments