Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் 25 மில்லியன் ரூபாவுக்கு மேல் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 01 முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இருந்து இந்த அபராதங்கள் CAA சுட்டிக்காட்டியுள்ளது.

அந்தக் காலகட்டத்தில், நாடு முழுவதும் 306 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டிருந்தன.

இந்த சோதனைகள் எதிர்காலத்தில் தொடரும் என்றும் CAA குறிப்பிட்டுள்ளது.

.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments