Tuesday, March 10, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கைது!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கைது!

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களில் இலங்கை கடற்படையினர் உள்நாட்டு கடற்பகுதியில் நடத்திய சோதனையின் போதே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மீனவர்களுடன், 35 டிங்கி படகுகளையும், பல நாள் மீன்பிடி படகு ஒன்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் திருகோணமலையைச் சுற்றியுள்ள கடலோர பகுதிகளிலும், காரைதீவு முதல் நிந்தவூர் வரையிலான கடல் பகுதியிலும், நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைதாகியுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments