Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட வரிச் சட்டத்தில் திருத்தம்!

சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட வரிச் சட்டத்தில் திருத்தம்!

இலங்கை அமைச்சரவை, 1988 ஆம் ஆண்டின் 40ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

2025 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளின் படி, அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக பின்வரும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன:

மொத்தக் கூட்டுத் தொகை அடிப்படையிலான வரியை 15% இலிருந்து 18% ஆக உயர்த்தல்.

இலங்கைப் பிரஜைகளுக்கான கசினோ நுழைவு வரியை 50 அமெரிக்க டொலர்களிலிருந்து 100 அமெரிக்க டொலர்களாக உயர்த்தல்.

சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்ட இந்த சட்டமூலம் ஜனாதிபரின் ஒப்புதலை பெற்றுள்ளது. அரசாங்கம் இதை வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments