Tuesday, March 10, 2026
spot_img
Homeஉலக செய்திகள்டெவன் வானூர்தி தளத்தில் ஸ்கை டைவிங்கில் இடம்பெற்ற விபத்தில் 49 வயது நபர் உயிரிழப்பு!

டெவன் வானூர்தி தளத்தில் ஸ்கை டைவிங்கில் இடம்பெற்ற விபத்தில் 49 வயது நபர் உயிரிழப்பு!

டெவன், ஹொனிடன் (Honiton) அருகிலுள்ள டன்கேஸ்வெல் (Dunkeswell) வானூர்தி தளத்தில் ஸ்கை டைவிங் மேற்கொண்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

டெவன், ஹொனிடன் (Honiton) அருகிலுள்ள டன்கேஸ்வெல் (Dunkeswell) வானூர்தி தளத்தில் நேற்று ( 28) பிற்பகல் 1 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஸ்கை டைவிங்கில் ஈடுபட்டிருந்த ஒருவர் விபத்துக்குள்ளாகியதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவசர சேவைப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளமை டெவன் மற்றும் கார்ன்வால் பொலிஸாரால் உறுதிப்படுத்தப்பட்டது.

உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தைப் பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வானூர்தி தளத்தில் இத்தகைய விபத்து நிகழ்வது இது முதல் முறையல்ல எனவும்
கடந்த 2025 ஜூன் 13 ஆம் திகதி, இதே தளத்தில் நடைபெற்ற ஒரு ஸ்கை டைவிங்கின் போது பாராசூட் விரியத் தவறியதில், 30 வயதான பயிற்றுவிப்பாளர் ஒருவரும் 48 வயதான பெண்ணொருவரும் 15,000 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அதனை ஏற்பாடு செய்த நிறுவனம் கலைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments